பினராயி விஜயனை தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புபடுத்துமாறு ஸ்வப்னாவை அமலாக்கப் பிரிவினர் கட்டாயப்படுத்தினர்: காவல்துறை அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

பினராயி விஜயன்

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இடம் விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பெயரை சேர்க்கும் படியும் அவர் பெயரைக் கூறுமாறும் ஸ்வப்னா சுரேஷை கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் சிவில் போலீஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 • Share this:
  கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இடம் விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பெயரை சேர்க்கும் படியும் அவர் பெயரைக் கூறுமாறும் ஸ்வப்னா சுரேஷை கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் சிவில் போலீஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  பெண் போலீஸ் அதிகாரியான சிஜி விஜயன் இது தொடர்பாக தன் கூற்றில், “விசாரணையின் போது அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை அதிகாரிகள் பெரும்பாலும் ஸ்வப்னா சுரேஷிடம் முதல்வர் பினராயி விஜயன் பெயரை இந்த வழக்கில் கோர்த்து விடும்படியாக கட்டாயப்படுத்தும் தொனியில்தான் இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக வெளியான குரல் ஒலிப்பதிவு தொடர்பான விசாரணை அதிகாரிகளிடம் பெண் போலீஸ் அதிகாரி சிஜி விஜயன் அளித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

  மேலும் அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் விசாரணை நடத்தினர் என்றும் விசாரணை நடத்தும் போது அதிகாரிகள் தொலைபேசியில் யாருடனோ ஹிந்தியில் அடிக்கடி பேசியதையும் தான் கண்டதாக தன் கூற்றில் தெரிவித்துள்ளார்.

  திருவனந்தபுரத்தில் ஞாயிறன்று நடந்தக் கூட்டத்திலும் அமித் ஷா, தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் பெயரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்து பேசினார்.

  முன்னதாக ஸ்வப்னா சுரேஷ் பேசியதான குரல் பதிவு ஒன்று வைரலானது, அதில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக மாறலாம் என்று அமலாக்கத்துறையினர் கூறியதாக வெளியானது பரபரப்பானது.

  சிறை அதிகாரிகள் இந்த குரல்பதிவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள், அவர்கள் கூறும்போது இந்தக் குரல் ஜெயிலில் பதிவு செய்யப்பட்டதல்ல என்றனர். விசாரணை மேலும் நடந்து வருகிறது.

  ஆகவே நிர்பந்தம் காரணமாகவே வீடியோ மூலம் அளித்த வாக்குமூலத்தில் ஸ்வப்னா இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனை தொடர்புபடுத்தியுள்ளார் என்று இந்தப் பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: