ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு... ஹிஜாப்பை எரித்து போராட்டம் செய்த கேரள பெண்கள்!

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு... ஹிஜாப்பை எரித்து போராட்டம் செய்த கேரள பெண்கள்!

ஹிஜாப்பை எரித்து போராட்டம்

ஹிஜாப்பை எரித்து போராட்டம்

கேரள மாநிலத்தில்  முதல் முறையாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala | Tamil Nadu

ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெண்கள் ஹிஜாப் ஐ எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கோடு டவுன் ஹால் பகுதியில் ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்லாமிய சுதந்திர சிந்தனை என்ற அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில்  ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் ஹிஜாப்பை எரித்து ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க | வளர்ப்பு நாய்க்கு டைமுக்கு சாப்பாடு வைக்கல.. உறவினரை அடித்துக் கொன்ற வாலிபர்!

உலக நாடுகளில் பல பகுதிகளில் ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் கேரள மாநிலத்தில்  முதல் முறையாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Hijab, Kerala