கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் மொபைல் போன் பழக்கத்துக்கு அடிமை ஆனதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து இறந்துள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள நாவாய்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஜீவா மோகன். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர், படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பத்தாம் வகுப்பு வரை மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்றுள்ளார். 10 வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ பிளஸ் கிரேட் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது அம்மாவின் ஸ்மார்ட் போனை அதிகமாக இவர் பயன்படுத்த தொடங்கியுள்ளார். காலப்போக்கில் போன் பயன்படுத்தும் பழக்கத்திறக்கு இவர் தன்னை அறியாமலேயே அடிமையாகியுள்ளார். குறிப்பாக, யூடியூப் தளத்தில் கொரியாவை சேர்ந்த கே பாப் என்ற இசைக் குழுக்களின் வீடியோக்களை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கி அடிமையாகியுள்ளார்.
இதன் காரணமாக இவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். அதேபோல் தனக்கு நல்ல நண்பர்களும் இல்லை என வருத்தமடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜூன் 4ஆம் தேதி நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அப்போது மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: எருமையின் உரிமையாளர் யார் என கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை - காவல்துறை உத்தரவு
அந்த தற்கொலை கடிதத்தில் மாணவி, நான் போன் பழக்கத்துக்கு அடிமை ஆகி விட்டேன். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Mobile phone, Phone addiction, Student Suicide