• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • டேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்

டேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்

 டெலிஷா டேவிஸ்

டெலிஷா டேவிஸ்

ஊரடங்கு காலத்துல ஒரு சின்னப்பொன்னு லாரியை ஓட்டிக்கிட்டு ஹைவேஸ்ல போறதா யாரோ ஆர்டிஓ கிட்ட சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

 • Share this:
  நான் 3 வருஷமா டேங்கர் லாரி ஓட்டுறேன் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை என புன்னகையுடன் தனது பேச்சை தொடங்குகிறார் டெலிஷா டேவிஸ்.

  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் டெலிஷா டேவிஸ். இவர் முதுகலை கல்லூரி மாணவி. காலையில் டிரைவிங் மாலையில் கல்லூரிப் படிப்பு என பேலன்ஸ் செய்து வருகிறார். தேர்வுகள் முடிந்தநிலையில் தற்போது ரிசல்ட்-காக காத்திருக்கிறார்.

  டெலிஷா டேவிஸ் அப்பா டேங்கர் லாரி ஓட்டுநர் 40 வருடமாக அவர் இந்த பணியை செய்துவருகிறார். தந்தையை பார்த்து தான் டெலிஷாவுக்கு லாரி ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. கேரள சாலைகளில் அசால்டாக டிரைவிங் செய்யும் டெலிஷா டூ-வீலர், ஃபோர் வீலர், 6 சக்கரங்களை உடைய வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸூம் வைத்திருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒரு நாளைக்கு 300 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் டெலிஷாவிடம் உங்களுக்கு இது கடினமாக இல்லையா என கேட்டால், இந்த வேலையை நான் காதலிக்கிறேன் அப்புறம் எப்படி கடினமாக இருக்கும் என பதிலளிக்கிறார்.  அவர் பேசுகையில், ‘அதிகாலை 2.30 மணிக்கு லாரியை எடுத்துக்கொண்டு இரும்பனம் புறப்படுவோம். கம்பெனி காலையில் திறப்பார்கள். அங்கிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை டேங்கரில் ஃபுல் செய்துக்கொண்டு மலப்புரம் மாவட்டம் திரூர் பயணமாவோம். வழியில் எங்கும் லாரியை நிறுத்த மாட்டோம். வண்டியில் இருக்கும் சரக்கை இறக்கிவிட்டால் மீண்டும் திரும்பி விடுவோம்.

  Also Read: '100 கோடி வங்கிக்கடன் வாங்கித்தரேன்.. 1.5 கோடி கமிஷன் கொடுங்க' - ஹரிநாடார் மீது மேலும் இரண்டு தொழிலதிபர்கள் மோசடி புகார்

  3 வருஷமா என்னை யாரும் தடுத்து நிறுத்துனது இல்லை. டேங்கர் லாரி அத்தியாவசிய பொருள் என்பதால் போலீஸார் நிறுத்த மாட்டார்கள். இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் போலீஸ் லாரியை நிறுத்துனாங்க. ஊரடங்கு காலத்துல ஒரு சின்னப்பொன்னு லாரியை ஓட்டிக்கிட்டு ஹைவேஸ்ல போறதா யாரோ ஆர்டிஓ சொல்லி இருப்பாங்க போல அதனால போலீஸ் நிறுத்துனாங்க.  நான் என்கிட்ட இருந்த ஹெவி லைசென்ஸை காட்டியதும் அவங்களுக்கு ஷாக். அவங்க என்ன பாராட்டுனாங்க. மீடியாவுக்கு அவங்கதான் தெரியப்படுத்துனாங்க. நான் 3 வருஷமா டேங்கர் லாரி ஓட்டுறேன் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கேரளாவிலே அபாயகரமான பொருள்களை கொண்டு செல்லும் வாகனத்தை ஓட்டும் உரிமம் வைத்துள்ள பெண் நீ தான் அப்படின்னு அவங்க சொன்னாங்க.

  Also Read: அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் - யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்

  16 வயதில் டேங்கர் லாரியை ஓட்டுவதற்கு கற்கத் தொடங்கினேன். நான் ஓட்டும் லாரியில் டீசல், பெட்ரோல் இரண்டும் இருக்கும். இரண்டுமே ஆபத்தானது. விபத்து ஏற்பட்டால் அந்த பகுதியில் பெரிய அளவில் சேதம் ஏற்படும். அதன்காரணமாக முதலில் எரிபொருள் இல்லாத எம்டி கண்டெய்னரை ஓட்ட கற்றுக்கொண்டேன்.

  சாலையில் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். வளைவுகளில் கவனமாக இருக்க வேண்டும். நமக்கு பின்னால் வரும் வாகனத்தின் மீதும் கவனம் இருக்க வேண்டும். டிரைவிங்கை நான் பேஷனோட செய்கிறேன். அப்பா எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். அவருடைய உதவி இல்லைன்னா என்னால் இதை செய்ய முடியாது. என்னுடைய கனவு மல்டி ஆக்சில் வால்வோ பஸ் ஓட்ட வேண்டும். அதற்கான லைசென்ஸ் எடுக்க முயற்சி செய்து வருகிறேன். என்றார்..  ஆல்..தி..பெஸ்ட் டெலிஷா டேவிஸ்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: