முகப்பு /செய்தி /இந்தியா / பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்காக குதிரையில் சீறிய கேரள மாணவி!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்காக குதிரையில் சீறிய கேரள மாணவி!

கேரள மாணவி

கேரள மாணவி

கேரளாவில் உள்ள பல ஊடகங்களும் இப்பெண் குறித்த பேட்டியையும் செய்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கேரள மாணவி ஒருவர் தனது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்காக குதிரையில் ஏறிப் பறந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூரில் மாணவி ஒருவர் தனது பொதுத்தேர்வுக்காக குதிரையில் பொது சாலை வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறார். உள்ளூர்வாசி ஒருவரால் இந்த குதிரை மாணவியின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

வைரலான இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “யாருக்காவது இந்த திருச்சூர் பெண்ணைத் தெரியுமா? அவர் குதிரை உடன் அவரது புகைப்படமும் இணைந்த காட்சியை எனது ஸ்கிரீன் சேவர் ஆக வைக்க நினைக்கிறேன். இவள் தான் என்னுடைய ஹீரோ. பள்ளிக்குச் செல்ல இவள் வேகமெடுக்கும் காட்சி எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையை எனக்குக் கொடுக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்திராவின் ட்விட்டர் பதிவுக்கு கேரள ஆர்ஜே லிஷ்னா என்பவர், “இவர் கிருஷ்ணா. இவரது குதிரை ‘ரணகிருஷ்’. இவர்கள் இருவரும் என்னுடைய காலை நேர ஷோவில் கலந்து கொள்கின்றனர்” என ஆனந்த் மஹிந்திராவுக்குப் பதிலளித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பல ஊடகங்களும் இப்பெண் குறித்த பேட்டியையும் செய்தியையும் வெளியிட்டு வருகின்றனர். பலரும் கிருஷ்ணாவுக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த பெங்களூரு அணி!

First published:

Tags: Horse riding, Kerala