வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடையிலிருந்த புதிய ஆடைகளை வழங்கிய துணி வியாபாரி!

நடிகர் ராஜேஷ் சர்மா தலைமையில் தன்னார்வலர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்கள் சேகரித்துவழங்கியுள்ளனர்.

news18
Updated: August 12, 2019, 6:33 PM IST
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடையிலிருந்த புதிய ஆடைகளை வழங்கிய துணி வியாபாரி!
கேரளா நபர்
news18
Updated: August 12, 2019, 6:33 PM IST
கேரளாவில் பக்ரீத் விற்பனைக்காக வைத்திருந்த புதிய ஆடைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார் கடை உரிமையாளர். அவருடைய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

கேரளாவில் இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-யை எட்டியுள்ளது. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் காரணமாக, 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள், 1,551 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த துயரமான நிலையிலும் சிறிய அளவிலான துணிக் கடை உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் மாட்டான்சேரி பகுதியில் சிறிய அளவில் துணிக் கடை வைத்துள்ளார் நவுசாத். நடிகர் ராஜேஷ் சர்மா தலைமையில் தன்னார்வலர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்கள் சேகரித்துவழங்கியுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற, பொருள்கள் வெள்ளத்தால் சேதமடைந்த விவரம் நவுசாத்துக்கு தெரியவந்துள்ளது. உடனே, தன்னார்வலர்களை கடைக்கு அழைத்து, கடையில் இருந்த புதுத் துணிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்.


அந்த விவரத்தை நடிகர் ராஜேஷ் சர்மா அவருடயை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதனையடுத்து, அந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. பலரும் நவுசாத்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து தெரிவித்த நவுசாத், ‘இந்த உலகைவிட்டு நாம் போகும்போது எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை. தேவையானவர்களுக்கு உதவி செய்வதைத்தான் நான் விரும்புகிறேன். நாளை பக்ரீத். அதனை, நான் இப்படி கொண்டாடுகிறேன்’ என்று தெரிவித்தார்.

நவுசாத்தின் செயலுக்கு கேரளா அமைச்சர் சுதாகரன், திரைப்பட நடிகர் ஆசிஃப் அலி, எர்ணாகுள மாவட்ட ஆட்சியர் சுஹாஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Also see:

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...