ஹோம் /நியூஸ் /இந்தியா /

டிசம்பர் மாதமே வந்த நியூ இயர்.. அர்ஜெண்டினா வெற்றியை விடிய விடிய கொண்டாடிய சேட்டன்கள்!

டிசம்பர் மாதமே வந்த நியூ இயர்.. அர்ஜெண்டினா வெற்றியை விடிய விடிய கொண்டாடிய சேட்டன்கள்!

கேரள மக்கள் கொண்டாட்டம்

கேரள மக்கள் கொண்டாட்டம்

பல ஆண்டுகள் கழிந்த பின்னும் நினைவு கூரும் அளவுக்கு சேட்டன்கள் கொண்டாடி தீர்த்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கையில் கிரிக்கெட் ஒரு அங்கமாக இருந்தாலும், நம் அண்டை மாநிலமான கேரளத்து காரர்களுக்கு கால்பந்து என்றால் உயிர். அர்ஜெண்டினா வெற்றியை கேரள மக்கள் விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்தனர்.

Midnight madness 🔥💥 pic.twitter.com/pJWHmadZHr

உலககோப்பை கால்பந்து தொடரால் கடந்த ஒரு மாதமாக திருவிழாக்கோலம் பூண்ட கேரளாவில், இறுதி போட்டி நாளில் உற்சாகம் நான்கு மடங்கு அதிகமாக காணப்பட்டது.

மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைத்து முழு போட்டியையும் கண்கொட்ட முடியாமல் பார்த்து ரசித்து முடித்துள்ளனர்.

இந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை கேரளாவில் உள்ள அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடி தீர்த்தனர்.

வெகுஜன மக்கள் மட்டுமின்றி கேரளாவின் முகங்களான நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் மற்றும் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோர் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

அர்ஜெண்டினா அணிக்கான ஆதரவாளர்கள் தான் அதிகம்.. ஆக அர்ஜெண்டினா கோல் அடித்த போதெல்லாம் விசில், கரகோஷம் என உற்சாக மிகுதியில் திளைத்தாலும், பிரான்சிஸ் அணி கொடுத்த டஃப்பையும் ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். அர்ஜெண்டினா வெற்றியால் அந்நாட்டினரை போலவே கேரள மக்கள் பரவசமடைந்தனர்.

அந்த டிசம்பர் 18ம் தேதி இரவில் நம்பிக்கை, விரக்தியோடு இறுதியில் பரவசத்தில் மூழ்கி கிடந்தோம் என, பல ஆண்டுகள் கழிந்த பின்னும் நினைவு கூரும் அளவுக்கு சேட்டன்கள் கொண்டாடி தீர்த்தனர்.

First published:

Tags: FIFA World Cup 2022, Football, Kerala, Viral Videos