முகப்பு /செய்தி /இந்தியா / ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

kerala | காசர்கோட்டில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் 18 பேரை மாநில அமைச்சர் கோவிந்தன், சுகாதாரத்துறை அலுவலர் ராம்தாஸ் பார்வையிட்டனர்.

kerala | காசர்கோட்டில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் 18 பேரை மாநில அமைச்சர் கோவிந்தன், சுகாதாரத்துறை அலுவலர் ராம்தாஸ் பார்வையிட்டனர்.

kerala | காசர்கோட்டில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் 18 பேரை மாநில அமைச்சர் கோவிந்தன், சுகாதாரத்துறை அலுவலர் ராம்தாஸ் பார்வையிட்டனர்.

  • Last Updated :

கேரளா மாநிலம் காசர்கோட்டில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்த அங்கு ஷவர்மா சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கார்சகோட்டில் உள்ள ஐடில் கூல் பார் என்ற கடையில், அருகே உள்ள டியூஷன் சென்டரில் படிக்கும் மாணவர்கள் பலர் நேற்று உணவருந்தியுள்ளனர். இந்த மாணவர்கள் பலருக்கு வீடு திரும்பியதும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த கடையில் தயாரிக்கப்ட்ட தரமற்ற உணவை உட்கொண்டதால் 18க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், கண்ணூர் மாவட்டம் கரிவாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி தேவாநந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இவரது தந்தையும் ஐந்து மாதத்திற்கு முன்னர் தான் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கடை உடனடியாக அடைக்கப்பட்ட நிலையில், கடையில் பணிபுரியும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் கடை முதலாளியையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவர்களை அமைச்சர் கோவிந்தன் மாவட்ட மருத்து அலுவலர் ராம்தாஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும், கடை உரிமையாளர், ஊழியர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 304, 308ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு கடைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பண்டாரி ஸ்வாகத் ரவீர்சந்த் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அந்த கடையில் உணவு சாப்பிட்ட மேலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்காக மருத்துவமனைகள், படுக்கைகளை ஏற்பாடு செய்து வைத்து மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:  ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆந்திராவில் நடந்த கொடூரம்

top videos

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள உணவு கடைகளில் உணவின் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Food Adulteration, Food poison, Kerala