கேரள மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 415-ஆக உயர்வு

கேரள மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 415-ஆக உயர்வு
கோப்புப் படம்.
  • News18
  • Last Updated: August 25, 2018, 8:52 PM IST
  • Share this:
கேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 415-ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 30-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது முதல், கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், கேரளாவில் மழை வெள்ளத்தால் 14 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக, இதுவரை 415 பேர் உயிரிழந்தனர். 124 பேர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 36. மாநிலத்தில் 776 கிராமங்களும், 54,11,712 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,722 வீடுகள் முழுமையாகவும், 20,945 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.


வெள்ளத்தில் சிக்கிய 2,80,679 பேர் மீட்கப்பட்டனர். 5,645 முகாம்கள் அமைக்கப்பட்டு, 14,52,425 பேர் தங்கவைக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 6,350 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் 5,441 மின்சாரக் கம்பங்களும், 1,437 டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
First published: August 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading