கேரளாவிற்கு ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் நிதியுதவி!

கேரளாவிற்கு ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் நிதியுதவி!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 25, 2018, 6:25 PM IST
  • Share this:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு , நிவாரண நிதியாக 7 கோடி ரூபாய்  வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால், மாநிலமெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்தோடி வீடுகளை மூழ்கடித்தது. 400-ம் அதிகமானோர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும்  உதவிகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் கேரளாவிற்கு உதவ முன் வந்துள்ளது.


“கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு மனதை உருக்குவதாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், மெர்சி கார்ப்ஸ் தொண்டு நிறுவனத்துக்கும், கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் 7 கோடி ரூபாய் வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப் ஸ்டோர், ஐடியூன்ஸ் ஸ்டோர் ஆகிய ஆப்பிளுக்குச் சொந்தமான ஆப்களின் ஹோம் ஸ்கீரினில், வாடிக்கையாளர்கள் தங்களால் இயன்ற தொகையை கேரளாவிற்கு வழங்குவதற்கு ஏதுவாக ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
First published: August 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading