முகப்பு /செய்தி /இந்தியா / காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை

வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை

அதிரப்பள்ளியில் வனத்தில் மழையின் காரணமாக கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் காட்டு யானை ஒன்று சிக்கிக்கொண்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thrissur, India

கேரளா மாநிலம்  அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை ஒன்று  வெள்ளத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  அதிகனமழை காரணமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  கேரளத்தில் 8 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கண்ணூரில் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காட்டாறு வெள்ளத்தில் காட்டு யானை ஒன்று சிக்கிக்கொண்டு தப்பிய வீடியோ காட்சி இன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளியில் வனத்தில் மழையின் காரணமாக கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் காட்டு யானை ஒன்று சிக்கிக்கொண்டது. புதர்களுக்கு இடையே  காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய யானை அங்கிருந்து தப்பிச்செல்லும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியானது.

' isDesktop="true" id="780162" youtubeid="_pOF5ViLmYY" category="national">

கேரளாவில் இதுவரை மழை வெள்ளம் காரணமாக 6 உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Elephant, Kerala, Kerala Flood