கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை - கேரள அரசு

கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை - கேரள அரசு
கேரள முதலவர் பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: August 18, 2018, 1:38 PM IST
  • Share this:
கனமழை காரணமாக கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. 10 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மழை குறைந்தது. இதனால், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீண்டும் மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுள்ளதாகவும் அதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
First published: August 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading