CAA-விற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

CAA-விற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

பினராயி விஜயன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள், எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் கேரள அரசு இந்த திருத்த சட்டமானது அரசியலமைப்பிற்கு  எதிரானது எனக் கூறி, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக் கோரி முதல் மாநிலமாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டதிருத்தம் சம உரிமை தொடர்பான அரசியலமைப்பின் 14வது பிரிவையும், வாழ்வுரிமை தொடர்பான 21வது பிரிவுக்கு எதிராகவும் இருப்பதாக மனுவில் கேரளா குற்றம்சாட்டியுள்ளது.

    மத சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பின் 25வது பிரிவும் மீறப்பட்டுள்ளதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. அதனால் சட்டதிருத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

    சட்டதிருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதேபோன்று தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 மாநில முதலமைச்சர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

    குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என இதுவரை 60க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை ஜனவரி 22ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

    Published by:Sivaranjani E
    First published: