• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • துணைவியைத் தேடி... நாய்களுக்கு வரன் பார்த்து திருமணம்... கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ருசிகர சம்பவம்

துணைவியைத் தேடி... நாய்களுக்கு வரன் பார்த்து திருமணம்... கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ருசிகர சம்பவம்

நாய்களுக்கு வரன் பார்த்து திருமணம்

நாய்களுக்கு வரன் பார்த்து திருமணம்

பட்டு புடவை, புத்தன் ஆடைகள் , மாங்கல்ய மாலைகள், திருமண கேக் வெட்டியும் பங்கேற்ற அனைவருக்கும் அறு சுவை உணவு விருந்து என அனைத்து வகையான ஏற்பாடுகள் உடன் திருமணம் நடைபெற்றது.

  • Share this:
    ஆகாஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் பிகிள் இனத்தை சேர்ந்த ஆசிட் என்ற நாய்க்கு கடந்த ஒன்றரை ஆண்டுகள் ஆக துணையை தேடி அலைந்து கடைசியில் புன்னையூர் குளம் என்ற பகுதியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவரிடம் ஜான்வி என்ற துணைவியை கண்டு பிடித்து விலை கொடுத்து வாங்கி ஆகாஷ் மற்றும் அர்ஜுனின் தாய் தந்தை அவர்கள் ஆசைப்பட்ட போல் தற்போது மனிதர்களுக்கு போல் அனைத்து வகையான ஏற்பாடுகள் உடன் திருமண பந்தலில் திருமண விழாகோலமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மல்லிகை பூவினால் அலங்கரிக்கப்பட்ட மணமேடை , எலும்புத்துண்டு வடிவிலான கேக் என ஆரவாரத்துடன் இரண்டு நாய்களுக்கும் கேரள மாநிலம் திருச்சூரில் படுஜோராக திருமணம் நடைபெற்றது.

    அங்குள்ள வாடானப்பள்ளியில் வசிக்கும் செல்லி - நிஷா தம்பதிக்கு ஆகாஷ் - அர்ஜூன் என இரண்டு மகன்கள் இருந்தாலும், வீட்டிற்கு செல்லப்பிள்ளை இந்த குட்டப்புதான். மூன்று வயதான குட்டப்புவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த குடும்பத்தினர், இதற்கான வரன் தேட ஆரம்பித்தனர்.

     

    குட்டப்புவின் ஜாதகம் 90'ஸ் கிட்ஸ்களுடன் மேட்ச் ஆகியிருந்ததாலோ என்னவோ, அவனுக்கு ஒன்றரை ஆண்டுகளாக மணப்பெண்ணே கிடைக்கவில்லை. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு திருச்சூரின் புன்னையூர்குளத்தில் கிடைத்தது குட்டப்புவிற்கு ஏற்ற ஜான்வி.



    அங்கிருக்கும் நாய் பயிற்சியாளர் சுபீஸ் பாஸ்கரிடம் வளர்ந்த ஜான்வியை, குட்டப்புவிற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே பேசி முடித்த செல்லி குடும்பத்தினர், ஜான்வியை கையோடு தூக்கிச்சென்றனர்.

    குட்டப்பு - ஜான்வி ஜோடிக்கு கல்யாணம் செய்ய, "கன்னி" மாதமே உகந்தது என முடிவு செய்த செல்லி குடும்பத்தினர், இடைப்பட்ட நாட்களில் காதல் ஜோடிக்கு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தினர்.



    திருமணத்திற்கென தனியாக resort-ஐ புக் செய்யப்பட்டு, சுற்றமும் நட்பும் சூழ திருமணம் அரங்கேறியது. விழாவிற்கு குட்டப்பு - ஜான்வி நண்பர்களும் அவர்களது எஜமானர்களுடன் வந்திருந்தனர்.



    மண ஜோடிக்கு பிடித்த பிரியாணியும், சிக்கன் ப்ரையும் மதிய விருந்தாக படைக்கப்பட்டது. இருவருக்கும் தனிஅறையையும் செல்லி - நிஷா தம்பதியர் அமைத்துள்ளனர்.

    பிரம்மாண்டமான முறையில் நாய்களுக்கு நடைபெற்ற இந்த திருமணம், பலரையும் கவர்ந்திழுத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: