முகப்பு /செய்தி /இந்தியா / மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்

மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்

ஜெசி சேவியர்

ஜெசி சேவியர்

கேரளாவில் 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பணியாற்றிய போலி வழங்கறிஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • Last Updated :

சட்டமே படிக்காமல் ஒரு பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பார் கவுன்சில் தேர்தலில் வேறு போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஒரு மொட்டை கடிதத்தால் அவரது உண்மை முகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜெசி சேவியர். இவர் சட்டப்படிப்பு படிக்காமல் கடந்த 2 வருடங்களாக நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார். பார் கவுன்சிலிலும் இவர் தன்னுடைய பெயரை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். தன் மீது எந்த சந்தேகமும் எழாமல் இருக்க முதலில் ஒரு சீனியர் அட்வகேட்டிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்துள்ளார். தான் ஒரு இறுதியாண்டி சட்டக்கல்லூரி மாணவி எனக் கூறி இண்டர்ன்ஷிப் செய்துள்ளார்.

Also Read: சுனாமி போல் 300 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத மணல் புயல் - பேரதிர்ச்சியில் மக்கள்!

இதைவைத்தே பார்கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். பல வழக்குகளில் நீதிமன்ற படி ஏறி வாதாடவும் செய்துள்ளார். பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்று லைப்ரரியனாக பதவியில் அமர்ந்துள்ளார். நூலகத்தில் இருந்து பல அறிய ஆவணங்களை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது சக நண்பர்களிடம் திருவணந்தபுரத்தில் சட்டம் படித்ததாகவும் அங்கு படிப்பை தொடர முடியாததால் பாதியில் இடைநிறுத்தம் செய்துவிட்டு மீண்டும் பெங்களூரில் படிப்பை தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்தான் ஜூலை 15-ம் தேதி பார் கவுன்சிலுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது. அதில் ஜெசி சேவியர் சட்டம் படிக்கவில்லை அவர் ஒரு போலி வழக்கறிஞர் என அதில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கேரள பார் கவுன்சில் விசாரணை மேற்கொண்டது விசாரணையில் அவர் சட்டம் படிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் திருவணந்தபுரத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ஒருவரின் பதிவு எண்ணை கொடுத்து பயிற்சி பெற்றதும் பார் கவுன்சிலில் பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Also Read:  Pegasus : ‘பெகாசஸ்’ ஒட்டு கேட்பு விவகாரம் - தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்கள்

இதனையடுத்து பார் கவுன்சில் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.மேலும் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் குடும்ப வறுமை காரணமாக சட்டம் படிக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் கவுன் அணியாமல் பயிற்சியில் ஈடுபட்டதாகவும். குற்றம் புரியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஜாமீன் கிடைக்கும் என நீதிமன்றத்தில் ஜெசி சேவியர் ஆஜராக வந்ததாகவும் அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்ததும் சில வழக்கறிஞர்களின் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச்சென்றதாகவும் தகவல்கள் கூறுகிறது. தலைமறைவாக உள்ள ஜெசி சேவியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Anticipatory bail, Bail, Crime | குற்றச் செய்திகள், Kerala, Lawyers