கேரள மாநிலத்தில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றனர். இந்தியாவில் 2001-ம் ஆண்டு திரிபுரா, மேற்குவங்கம், கேரளா என மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இப்போது கேரளத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. 1987-ம் ஆண்டுகளில் இருந்து கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மாறி மாறி ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர்.
இந்த முறை பாஜகவும் கேரளத்தில் காலூண்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ரிபப்ளிக் டிவி
சிபிஎம் கூட்டணி 72-80,
காங்கிரஸ் கூட்டணி 58-64,
பாஜக கூட்டணி 1-5
இந்தியா டுடே
சிபிஎம் கூட்டணி 104-120,
காங்கிரஸ் கூட்டணி 20-36,
பாஜக கூட்டணி 0-2,
இதர கட்சிகள் 0-2
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.