1965 முதல் எம்.எல்.ஏ... ஒரே தொகுதியில் 13 முறை வெற்றி...! கே.எம். மாணி காலமானார்

1965 மற்றும் அதன் பின்னர் நடந்த 12 தேர்தல்களிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று அரை நூற்றாண்டாக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார் மாணி.

news18
Updated: April 9, 2019, 5:31 PM IST
1965 முதல் எம்.எல்.ஏ... ஒரே தொகுதியில் 13 முறை வெற்றி...! கே.எம். மாணி காலமானார்
கே. எம் மாணி
news18
Updated: April 9, 2019, 5:31 PM IST
கேரள அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவரான கே.எம் மாணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்திய தேசிய காங்கிரசின் மாவட்ட செயலாளராக பணியாற்றிய கே.எம். மாணி, சக தோழர்களுடன் 1964-ல் கேரள காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 1965-ம் ஆண்டில் பலா தொகுதியில் இருந்து முதன் முதலாக சட்டமன்றத்துக்கு சென்றார்.

அதன் பின்னர் நடந்த 12 தேர்தல்களிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று அரை நூற்றாண்டாக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார் மாணி.

காங்கிரசில் இருந்து பிரிந்து கட்சி தொடங்கினாலும், பின்னர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து நிதி, வருவாய், சட்டம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். பல நேரங்களில் வாய்ப்பு வந்த போதும் சூழ்நிலை காரணமாக அவர் முதல்வராக முடியாமல் போனது.

2009-ம் ஆண்டில் கேரள காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. கேரள காங்கிரஸ் (எம்) என்ற பெயரில் மாணியின் அணி இயங்கியது.

86 வயதாகும் மாணி உடல்நிலைக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் காலமானார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...