முகப்பு /செய்தி /இந்தியா / கேரள முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

கேரள முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

உம்மன் சாண்டி

உம்மன் சாண்டி

Kerala ex chief minister | காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை அம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், உம்மன் சாண்டியை அவரது மனைவி, மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.ஆனால் இதை உம்மன் சாண்டி தற்போது மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக, உம்மன் சாண்டி மகன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், அப்பா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தைக்கு சிறிதளவு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kerala, Oomen Chandy