கேரளாவில் வெடிமருந்தை உண்டு இறந்த யானைதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. பாலக்காடு அருகே, அன்னாசி பழத்தில் வெடிமருந்தை யானைக்கு யாரோ, உணவாக கொடுக்க, கர்ப்பிணி யானை படுகாயம் அடைந்து, ஆற்றில் நின்றவாறே உயிரிழந்துள்ளது.
அன்னாசி பழத்தை உணவாக கொடுக்கவில்லை என்றும், பயிர்களை நாசம் செய்யும் பன்றிக்கு வைக்கப்பட்டுள்ள பழத்தை யானை உண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அம்மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகளவில் இயங்கி வரும் Humane Society International/India என்கிற விலங்குகள் நலன் சார்ந்து இயங்க அமைப்பு யானைக்கு வெடிபொருளை உணவாக கொடுத்த குற்றவாளிகள் குறித்த விபரங்களை தெரிவிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கேரள வனத்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 917674922044 என்கிற எண்ணுக்கு அழைத்து விபரங்களை தெரிவிக்கலாம் என்றும் அழைப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala