கேரளாவில் பாஜக கூட்டணி வேட்பாளரான முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர்! - அதிர்ச்சியில் சிபிஎம்...

கேரளாவில் பாஜக கூட்டணி வேட்பாளரான முன்னாள் கம்யூனிஸ்ட்  தலைவர்! - அதிர்ச்சியில் சிபிஎம்...

ஜோதிஸ்

பாரத் தர்ம ஜன சேனா கட்சி கடந்த முறை 37 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. இதில் பல தொகுதிகளில் பாஜகவுக்கு நிகரான வாக்குகளை பெற்றது, இதன் காரணமாகவே கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை இக்கட்சிக்கு பாஜக ஒதுக்கியுள்ளது.

  • Share this:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய தலைவர் ஒருவர், பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் மாநிலமாக விளங்கும் கேரளாவில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் கூட்டணி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆளும் சிபிஎம் கட்சியிலிருந்து விலகிய ஆலப்புழாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதிஸ் என்பவர் பாஜக கூட்டணியில் உள்ள பாரத் தர்ம ஜன சேனா கட்சியில் இணைந்தார். ஆலப்புழாவில் உள்ள அரூர் தொகுதியில் அவர் சீட் கேட்டிருந்த நிலையில் அவரின் கோரிக்கையை சிபிஎம் ஏற்கவில்லை. தன்னீர்முக்கம் பஞ்சாயத்து தலைவரான ஜோதிஸ்-ஐ பாரத் தர்ம ஜன சேனா கட்சி செர்தலா தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சிபிஎம் முன்னாள் தலைவர் அறிவிக்கப்பட்டிருப்பது இடதுசாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரத் தர்ம ஜன சேனா கட்சியானது பாஜக கூட்டணியில் 2வது பெரிய கட்சியாக விளங்குகிறது. பாஜக கூட்டணியில் இக்கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று தனது வேட்பாளர் பட்டியலை பாரத் தர்ம ஜன சேனா வெளியிட்டது. இதில் ஜோதிஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக சிபிஎம்-ல் இருந்து வெளியேறிய ஜோதிஸ் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி தொடர்பாக கூறுகையில், சில மாஃபியாக்களின் கைகளில் சிபிஎம் சிக்கிக்கொண்டது. என்னைப் போல பல இளம் தலைவர்கள் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சிறந்த செயலாற்றிய அமைச்சர்கள் ஜி.சுதாகரன் மற்றும் ஐசக் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி என்று ஜோதிஸ் தெரிவித்தார்.

பாரத் தர்ம ஜன சேனா கட்சி கடந்த முறை 37 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. இதில் பல தொகுதிகளில் பாஜகவுக்கு நிகரான வாக்குகளை பெற்றது, இதன் காரணமாகவே கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை இக்கட்சிக்கு பாஜக ஒதுக்கியுள்ளது. எழவா எனும் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற கட்சியாக பாரத் தர்ம ஜன சேனா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: