சதித்திட்டம் தீட்டி தங்கை முறையுள்ள உறவினர் பெண்ணை கணவரிடமிருந்து பிரித்த அரசு மருத்துவர் - சின்னத்திரை நடிகர் உட்பட மூவர் கைது

சதித்திட்டம் தீட்டி தங்கை முறையுள்ள உறவினர் பெண்ணை கணவரிடமிருந்து பிரித்த அரசு மருத்துவர் - சின்னத்திரை நடிகர் உட்பட மூவர் கைது

மருத்துவர் சுபு

உறவினர் பெண்ணை அவரின் கணவரிடமிருந்து பிரிக்க சதித்திட்டம் தீட்டி பிரித்த அரசு மருத்துவர், அவருக்கு உதவியாக இருந்த சின்னத்திரை நடிகருடன் சேர்ந்து சிக்கியுள்ளார்.

  • Share this:
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கல பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சுபு. இவர் அங்குள்ள அரசு பல் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினரின் மகள் ஒருவர் அதே பகுதியில் திருமணமாகி வசித்து வருகிறார். இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதாகக் கூறி அவரது கணவருக்கு மொட்டை கடிதம் அனுப்பியுள்ளார் சுபு.

இதுகுறித்து மருத்துவர் சுபு உடன் சென்று வர்க்கல் போலீசில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து இளம் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களின் வாட்ஸ்ஆப் எண்களுக்கு இளம் பெண்ணின் ஆபாசப் படங்கள் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது கணவர் ஆபாசப் படங்களை அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த இளம்பெண் மருத்துவர் சுபு உடன் சென்று போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க உதவி ஆணையர் பிரதாப் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அந்த இளம்பெண் கணவரைப் பிரிந்துள்ளார்.

போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில் நெடுமங்காடு அருகே ஆனாடு என்ற பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஸ்ரீஜித் ஆபாசப் படங்களை அனுப்பியது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில், ஸ்ரீஜித் அதே பகுதியில் செல்போன் ரீசாஜ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். அங்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் ஆதார் கார்டை மோசடி செய்து சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த சிம் கார்டை பிரபல சின்னத்திரை நடிகரும் மருத்துவர் சுபுவின் நெருங்கிய நண்பருமான ஜாஸ்மீர் கான்க்கு கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

Also read: ஸ்விக்கியுடன் கைகோர்க்கும் மத்திய அரசு... ஆன்லைனில் தெருவோர உணவு விற்பனைஇதை அடுத்து சின்னத்திரை நடிகர் ஜாஸ்மீர்கானை பிடித்து விசாரித்தபோது, மருத்துவர் சுபு கூறியதால்தான் இளம் பெண்களின் படங்களை மார்பிங் செய்து கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். தொடர்ந்து மருத்துவர் சுபுவைப் பிடித்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது.

அந்த இளம் பெண், சுபுவிற்கு தங்கை முறை உடையவர். எனினும் அவர் மீது நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவரிடமிருந்து அந்த இளம்பெண்ணை பிரித்து தனது ஆசைக்கு இணங்க வைக்க திட்டம் போட்டுள்ளார். இதற்காக சின்னத்திரை நடிகர் ஜாஸ்மீர் மூலம் மொட்டை கடிதம், ஆபாசப் படங்களை அனுப்பி தம்பதியைப் பிரித்ததாக ஒத்துக்கொண்டார்.

இதை அடுத்து மருத்துவர் சுபு, அவருக்கு உதவிய ஜாஸ்மீர் கான், அடுத்தவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கிய ஸ்ரீஜித் மூவரையும் கைது செய்தனர். உண்மையை எடுத்துக்கூறி சுபுவின் சதி செயலால் பிரிந்த தம்பதியை போலீசார் சேர்த்து வைத்தனர்.
Published by:Rizwan
First published: