ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவிக்கு கால் வலி.. 2 பெக் மதுபானம் அருந்தச் சொல்லி மருந்து சீட்டு கொடுத்த மருத்துவர் சஸ்பெண்ட்!

மனைவிக்கு கால் வலி.. 2 பெக் மதுபானம் அருந்தச் சொல்லி மருந்து சீட்டு கொடுத்த மருத்துவர் சஸ்பெண்ட்!

மதுவை மருந்தாக பரிந்துரைத்த மருத்துவர்

மதுவை மருந்தாக பரிந்துரைத்த மருத்துவர்

மருந்து வேண்டும் என வற்புறுத்தி கேட்டதால், "கணவருக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் பாருக்கு சென்று இரண்டு பெக் மது அருந்தவும்" என பிரிஸ்கிரிப்ஷனில் மருத்துவர் எழுதி தந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளா மாநிலத்தில் பெண்ணின் கால் வலிக்கு மது அருந்துமாறு வைத்தியம் சொல்லி மருத்துவர் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம் குருவாயூரைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரின் மனைவி பிரியாவுக்கு நீண்ட நாள்களாக கால் மற்றும் மூட்டு வலி இருந்து வருகிறது. இதற்கு தீர்வு கான அனில்குமார் தனது மனைவி பிரியாவை அருகேயுள்ள ஆர்த்தோ மருத்துவமனையில் கொண்டு காண்பித்துள்ளார். அவர்கள் பிரியாவின் கால்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர்.

  எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர், பெண்ணின் காலில் ஒரு பிரச்னையும் இல்லை. ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்றுள்ளார். அதற்கு கணவர் அனில், மனைவிக்கு கால் வலி மிக ஜாஸ்தியாக உள்ளது. எனவே, மருந்து கொடுங்கள் என்று பேசியுள்ளார். இதையடுத்து அந்த டாக்டர் சீட்டை எடுத்து மருந்து ஒன்றை எழுதி தந்துள்ளார். அந்த சீட்டை பெற்றுக்கொண்டு அனில்குமார் மருந்து கடைக்கு சென்றுள்ளார். அந்த சீட்டை மருந்து கடைக்காரரிடம் அனில் கொடுத்துள்ளார் மருந்தாளுனர்கள் அதை வாங்கி பார்த்து சிரித்துள்ளனர். ஏன் சிரிக்கிரார்கள் என்று அனில் விழித்து பார்த்தபோது, சீட்டில் எழுதியிருந்தது என்னவென்று அவருக்கு தெரியவந்துள்ளது.

  இதையும் படிங்க: ‘மதியம் வரை வீடு ஜப்தி செய்ய நெருக்கடி; மாலையில் அடித்த ஜாக்பாட்’ - ஒரே நாளில் மீன் வியாபாரி வாழ்வை மாற்றிய லாட்டரி!

  அனில்குமார் மருந்து வேண்டும் என வற்புறுத்தி கேட்டதால், "கணவருக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் பாருக்கு சென்று இரண்டு பெக் மது அருந்தவும்" என பிரிஸ்கிரிப்ஷனில் மருத்துவர் எழுதி தந்துள்ளார். மருத்துவரின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த அனில் குமார், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து நிர்வாகம் அந்த மருத்துவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Kerala, Viral News, Woman