ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லை: தன்னம்பிக்கையுடன் நீச்சல் பழகி ஆற்றைக் கடந்த சிறுவன்

பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லை: தன்னம்பிக்கையுடன் நீச்சல் பழகி ஆற்றைக் கடந்த சிறுவன்

கேரளா பையன்

கேரளா பையன்

கேரளாவில் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் நீச்சல் பழகி ஆற்றைக் கடந்து சிறுவன் சாதனைபடைத்துள்ளான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமெண்ண பகுதியைச் சேர்ந்த முஹம்மத் ஷஹீத்தின் மகன் 8 வது வகுப்பில் படித்து வரும் முஹம்மது அஸீம். இந்த சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கைகள் இல்லாமல் 90 சதவீதம் குறைபாட்டுடன் பிறந்தார். உடல் பலம் குறைந்த சிறுவனின் தன்னம்பிக்கை அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்கிறது.

90 சதவீத உடல் குறைபாடுடைய முகமது அசீம், தனது இரு கால்களையும் உடலையும் அசைத்து சுமார் ஒரு மணி நேரம் கேரளாவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஆலுவ, பெரியாறு ஆற்றை நீந்தி கடந்துள்ளார். சிறுவனின் இந்தச் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிறவியில் கைகள் இல்லாத முஹம்மது அஸீம், உடலும், வலுவிழந்த கால்களையும் அசைத்து ஆற்றின் குறுக்கே நீந்திச் சென்றதை மூச்சை அடக்கி வியப்புடன் பாத்து நின்றனர் பொது மக்கள். பெரியாற்றின் ஆழமான பகுதியை கடந்து மறுகரையை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆனது. அஸீம் தனது பயிற்சியாளர் சஜி வளாசேரியுடன் ரயில்வே பாலத்தின் தூண்களை சுற்றி நீந்தி ஆற்றின் மறுபுறத்தை அடைந்தார்.

கேரள சிறுவன்

இரண்டு வார கடின பயிற்சிக்கும் உழைப்புக்குப் பிறகு தான் அஸீம் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் இவர். பயிற்சியாளர் சஜி வளாசேரியின் வீட்டில் தங்கி இந்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியாளர் சஜி வாலாசேரி கைகள் இல்லாத இந்த சிறுவனுக்கு பயிற்சி அளிக்க நீந்துவதற்கு முன் தனது இரண்டு கைகளையும் உடலோடு கட்டிக்கொண்ட பின் தனக்கு சொந்தமாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டார் இந்த பரிற்ச்சியாளர்.

அஸீமுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க சிரமமாக இருக்கும் என பயிற்சியாளர் நினைத்தார். ஆனால் தனது உடல் குறைபாட்டை வெல்லும் மன வலிமை மற்றும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. தன்னிம்பிக்கை இருக்கும் அவருக்கு நீச்சல் எண்பது எட்டாக்கனி என்று நினைத்த அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து சிறிது நாட்களிலேயே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் இந்த சிறுவன்.

First published:

Tags: Kerala