அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இங்கு ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கான இன்று அத்தியாவசிய பொருட்களைத் தவிர மற்ற எந்த பொருட்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், கள் விற்பனைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதுவும் அத்தியாவசிய பொருளாக கருதப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 25-ம்தேதி ஒரே நாளில் மட்டும் 55 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 2020-ல் கொரோனா பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் ஏற்பட்ட மிக அதிகமான பாதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஊரடங்கை பொருத்தளவில் மொத்தம் 20 பேருக்கு மட்டுமே திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பால், செய்தித்தாள், மீன், இறைச்சி, பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!
மருந்துக் கடைகள், மீடியா, டெலிகாம், இன்டர்நெட் சேவைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. அவசரமாக பயணம் மேற்கொள்வோர் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் ஆவணங்கள் காட்டப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டன.
ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து வருவோர் அவர்களது சொந்த வாகனங்களில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க... ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!
மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், தேசிய பேரிடர் துறை, கள் விற்பனையை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்திருந்தது. இதன் காரணமாக கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.