Home /News /national /

கவர்ச்சி உடை அணிந்தவர்கள் மீதான பாலியல் சீண்டல், குற்றமாகாது : நீதிமன்ற கருத்தால் சர்ச்சை

கவர்ச்சி உடை அணிந்தவர்கள் மீதான பாலியல் சீண்டல், குற்றமாகாது : நீதிமன்ற கருத்தால் சர்ச்சை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

74 வயதான மாற்றுத் திறனாளி எழுத்தாளர், வலுக்கட்டாயமாக பெண்ணை மடியில் அமர வைத்து தொல்லை தந்துள்ளார் என பெண் தரப்பு கூறுவதை நம்ப முடியவில்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    பெண்கள் அணிந்த உடையை காரணம் காட்டி பாலியல் தொல்லை வழக்கில் கேரளா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கேரளா மாநிலத்தில் 74 வயதான மாற்று திறனாளி எழுத்தாளர் சிவிக் சந்திரன் மீது பெண் ஒருவர் பாலியல் சீண்டல் வழக்கு தொடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி நந்தி கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் எழுத்தாளர் சிவிக் சந்திரனை புகார் கொடுத்த பெண் சந்தித்தாகாவும். அப்போது எழுத்தாளர் தன்னை கட்டாயமாக மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு எழுத்தாளர் சந்திரன் கோழிக்கோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவத்தன்று பெண் தன்னுடன் இருந்த புகைப்பட ஆதாரங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த முன்ஜாமீன் வழக்கை விசாரித்த கோழிக்கோடு செசன்ஸ் நீதிபதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் தரப்பு வழங்கிய புகைப்பட ஆதாரங்கள் அடிப்படையில், புகார் அளித்த பெண் அணிந்திருந்த ஆடை பாலியல் எண்ணத்தை தூண்டும் வகையில் இருந்துள்ளது.

    மேலும், 74 வயதான மாற்றுத் திறனாளி எழுத்தாளர், வலுக்கட்டாயமாக பெண்ணை மடியில் அமர வைத்து தொல்லை தந்துள்ளார் என பெண் தரப்பு கூறுவதை நம்ப முடியவில்லை. அதனால், பாலியல் வன்கொடுமை வழக்கிற்கான பிரிவான சட்டப் பிரிவு 354-ஏ குற்றச்சாட்டுக்கு ஆளான எழுத்தாளருக்கு பொருந்தாது எனக் கூறி எழுத்தாளருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

    இதையும் படிங்க: உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம்.. 2-வது இடமும் இந்தியாவிற்கே... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    பெண்ணின் ஆடை பாலியல் உணர்வை தூண்டுவதாக இருக்கிறது எனக் கருத்து கூறி நீதிமன்றம் ஜாமீன் உத்தரவை பிறப்பித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  கேரளா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Kerala, Kerala high court, Sexual harassment

    அடுத்த செய்தி