ஹோம் /நியூஸ் /இந்தியா /

பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. யூடியூப் தம்பதியினர் விரித்த வலையில் விழுந்த 68 வயது முதியவர்! கேரளாவில் மீண்டும் ஒரு ஹனி ட்ராப்!

பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. யூடியூப் தம்பதியினர் விரித்த வலையில் விழுந்த 68 வயது முதியவர்! கேரளாவில் மீண்டும் ஒரு ஹனி ட்ராப்!

முதியவரை ஏமாற்றிய தம்பதி

முதியவரை ஏமாற்றிய தம்பதி

Kerala honey trap | பணக்கார முதியவரை வலையில் சிக்க வைத்து பணத்தை பறித்த தம்பதியினரின் செயல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் 68 வயது முதியவருடன் உல்லாசத்தில் இருந்துவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய யூடியூப் தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சார்ந்த நிஷாத் மற்றும் மலப்புரம் மாவட்டத்தை சார்ந்த ராஷிதா தம்பதியினர், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூட்யூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால் இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும்  பக்காவாக பிளான் போட்டு முகநூல் பக்கத்திலிருந்து வயதான வசதியான ஆட்களை தேட துவங்கி உள்ளனர்.

அந்த வகையில் சிக்கியவர் தான் மலப்புறம் கல்பாகம்சேரி பகுதியை சார்ந்த வசதி படைத்த  68 வயது முதியவர். இவருக்கு ஸ்கெட்ச் போட தொடங்கிய ராஷிதா, தன்னை ஒரு டிராவல் Vlogger எனக்கூறி முதியவருடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.பின்பு கணவரின் உதவியுடன் முதியவருடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனை கணவரும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து தனது கணவருக்கு தொழில் தொடங்க வேண்டும் என அவ்வப்போது முதியவரிடம் பணம் வாங்கியுள்ளார். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் ஒரு கட்டத்தில் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால் இருவரும் எடுத்து வைத்திருந்த வீடியோவை காட்டி மிரட்டி ஒரு வருடத்திற்குள் முதியவரிடம் இருந்து 23 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர்.

இந்த பணத்தை வைத்து தம்பதியினர் இருவரும் ஒரு கார் வாங்கி நாடு நாடாக சுற்றி திரிந்து அதனை வீடியோ எடுத்து malay mallus என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து அவர்களது யூடியூப் வாசகர்கள் அதிகமானதால் முதியவரை தொடர்ச்சியாக மிரட்டி பணம் வசூலித்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளனர்.

இதையும் படிங்க | எடை குறைஞ்சாரா? 8 கிலோ கூடி இருக்கார்... சொகுசாக சாப்பிடும் சத்யேந்தர்.. வீடியோ வெளியிட்ட சிறை நிர்வாகம்!

இருவருக்கும் சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்த வீடியோக்களை அவர்களது யூடியூப்பில் பதிவிட்டுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பணம் குறைந்து வருவது குறித்து முதியவரின் உறவினர்கள், அவரிடம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து முதியவரும் நடந்த சம்பவத்தை அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆறு மாத கைக்குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், ராஷிதாவுக்கு மட்டும் முன் ஜாமீன் வழங்கி, நிஷாதை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Cheating, Crime News, Kerala