கேரளாவில் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு... நாள்ஒன்றுக்கு 22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை குறையவில்லை. கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டில் நாடு இயல்பு நிலையை அடையும் என்று மக்கள் கருதியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. இரண்டாவது அலையின் பாதிப்பு முதல் அலையை விட மிகக் கடுமையாக இருந்தது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

  இருப்பினும், இரு மாத காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. அதனால் தொடர்ச்சியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தற்போது, இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 45,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில், கேரளாவில் மட்டும் சுமார் 20,000 பேருக்கு தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

  இந்தியாவில் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது. எனவே, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர் ஆய்வின் படி, ‘கேரளாவில் ஜூன் 14 முதல் ஜூலை 6-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 44.4 சதவீதம் பேருக்கு மட்டுமே எதிர்பு சக்தி இருந்துள்ளது. இது மிகக் குறைவானது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கும் அதில் அடங்கும்.

  "கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்" நீண்ட காலத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட உலக சுகாதார மையம்!
  கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ‘6 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தேசிய நோய்த் தடுப்பு மைய இயக்குநர் தலைமையில் ஆறு பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் இன்னமும் அதிக அளவு கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது. அந்தக் குழு கேரள அரசின் முயற்சிக்கு உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து தெரிவித்த கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், ‘கேரளாவில் இருக்கும் சூழல் இயல்பானதுதான். கொரோனா முதல் அலையில் பின்பற்றிய அதே தடுப்பு நடவடிக்கைகளைத் தான் தற்போதும் பின்பற்றுகிறோம். கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய அளவில் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 40 சதவீதம் கேரளாவிலிருந்து பதிவானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மற்ற மாநிலங்களில் குறைந்தபோது கேரளாவில் அதிகமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் இரண்டாவது அலை தாமதமாகத் தான் தொடங்கியது. மே 12-ம் தேதி எங்களுக்கு கொரோனா அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, கொரோனா பாதிப்பு நிலைத்தன்மையை அடைந்துள்ளது. வரும் இரண்டு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறையும்’ என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: