கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா: 3 மாதங்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா

தினசரி தொற்று பாதிப்பை பொறுத்தவரை கேரளாவில் கடைசியாக மே 20ம் தேதி 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியிருந்தது. தற்போது மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 • Share this:
  கேரளாவில் மூன்று மாதங்களுக்கு பின்னர் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும்  30 ஆயிரத்தை  கடந்துள்ளது.

  இந்தியாவில்  கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்துவந்தது. பின்னர் மெல்ல அதிகரிக்க தொடங்கிய பாதிப்பு, ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்தது.

  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில்,ஓனம் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வுகளை கேரள அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவுக்கு நீதிமன்றம் உட்பட பல்வேறு தரப்பும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில்,ஓனம் பண்டிகைக்கு பின்பு கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த திங்களன்று தினசரி பாதிப்பு 13,383 ஆகவும் இறப்பு 90 ஆகவும்  கேரளாவில் பதிவாகி இருந்தது. இரண்டு நாட்கள் கடந்துள்ள  நிலையில், இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அரசு வெளியிட்டுள்ள தகவல்படி கடந்த 24 மணி நேரத்தில்  31,445 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், 215 பேர் உயிரிழந்துள்ளனர்.  2 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

  தினசரி தொற்று பாதிப்பை பொறுத்தவரை கடைசியாக மே 20ம் தேதி 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியிருந்தது. தற்போது மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  தற்போது, 1.70 லட்சம் பேர் அங்கு தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், கொரோனா குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  இதேபோல்,  அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்  எச்சரித்துள்ளார்.
  Published by:Murugesh M
  First published: