Home /News /national /

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவரை எட்டி உதைத்த போலீஸ்காரர் - வைரல் வீடியோ

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவரை எட்டி உதைத்த போலீஸ்காரர் - வைரல் வீடியோ

Mavali Express

Mavali Express

பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகே கீழே உட்கார வைத்திருந்த நிலையில் ஒரு போலீஸ்காரர் அந்த பயணியை தனது காலால் தொடர்ந்து எட்டி உதைத்தவாறே இருந்தார்.

  டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்த நபரை ரயில்வே போலீஸ் ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் அந்த காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

  எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணியின் கைகளை கட்டி தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர், காவலர் ஒருவர் முன்னிலையில் மற்றொரு ரயில்வே போலீஸ் அந்த நபரை தொடர்ந்து எட்டி உதைத்தவாறே இருந்தார். 20 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தான் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  கேரளாவின் மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலானது, தலைநகர் திருவனந்தபுரத்திற்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கும் இடையே சேவையளிக்கக்கூடிய ஒரு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் கடந்த ஞாயிறன்று மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டிருந்த போது கன்னூர் வருகே அதில் பயணம் செய்த ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

  Also read:  10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா

  ரயில்வே போலீசாரின் உதவியுடன் அந்த பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகே கீழே உட்கார வைத்திருந்த நிலையில் ஒரு போலீஸ்காரர் அந்த பயணியை தனது காலால் தொடர்ந்து எட்டி உதைத்தவாறே இருந்தார். டிக்கெட் பரிசோதகர் அருகாமையில் இருந்தபோதும் அவரும் அதை தடுக்கவில்லை. இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பயணி வடகரை ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்.

  தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவதை விட்டுவிட்டு எதற்காக ஈவு இரக்கம் இல்லாமல் பயணியை போலீஸ் அடிக்க வேண்டும்., அவரையும், இதனை தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்த டிக்கெட் பரிசோதகரையும் தண்டிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்தன.

  Also read:  வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’.. வியந்துபோன மக்கள் - படங்கள்

  இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஏ.எஸ்.ஐ பிரமோத் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்தும் விடுவிக்கப்படுவார் என உயர் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  அதே நேரத்தில் அந்த பயணி குடித்துவிட்டு பெண் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணையத்தின் நீதித்துறை உறுப்பினர் கே பைஜு நாத், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

  Also read:  Omicron | மெட்ரோ நகரங்களில் ஏற்படும் பாதிப்புகளில் 75% ஓமைக்ரான் தான் - மூத்த விஞ்ஞானி

  இச்சம்பவத்தை கண்டித்து கன்னூரில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான வி.டி.சதீஷன் கூறுகையில், கேரள காவல்துறை போலீசாருக்கு பதிலாக ஆளும் கட்சியினரால் இயக்கப்படுகிறது என காட்டமுடன் தெரிவித்தார்.
  Published by:Arun
  First published:

  Tags: Viral Video

  அடுத்த செய்தி