அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டில் 3 ரசிகர்கள் படுகாயமடைந்தனர்.
கேரளாவில் கால்பந்து பந்து போட்டி நடக்கும் போதெல்லாம், அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகளின் ரசிகர்கள் குழுவாக பிரிந்து தங்கள் ஆதரவு அணிகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் அமைப்பது என கேரளாவையே களைகட்ட வைப்பார்கள். அந்த வகையில் ரசிகர்கள் உற்சாகமாக தங்களது ஆதரவுகளை தெரிவித்து கொண்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் நடந்த இறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்றது. இதனை கேரளாவின் அர்ஜெண்டினா ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த உற்சாகம் வன்முறையாக வெடித்தது.
இதில் நள்ளிரவில் 12.30 மணியளவில் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் என பல இடங்களில் கால்பந்து ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ரசிகர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலை தடுக்க சென்ற போலீசாரும் இதில் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மோதலில் ஈடுபட்ட 8 பேர பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று கொச்சி கலூர் சர்வதேச விளையாட்டு அரங்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில் போட்டியை ரசிகர்கள் கண்டு ரசித்தனர். போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த 2 போலீசாருடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது போதாது என 2 போலீசாரையும் சாலையிலேயே தரதரவென இழுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 பேரை கைது செய்து மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, Crime News, Kerala