Home /News /national /

ராகுல் காந்தி யாத்திரைக்கு காய்கறி கடைகாரரிடம் அடாவடியாக பணம் வசூல் செய்த காங்கிரசார்..3 பேர் சஸ்பெண்ட்

ராகுல் காந்தி யாத்திரைக்கு காய்கறி கடைகாரரிடம் அடாவடியாக பணம் வசூல் செய்த காங்கிரசார்..3 பேர் சஸ்பெண்ட்

கேரளா காங்கிரஸ் பிரமுகர்கள் அடாவடியாக பணம் வசூல்

கேரளா காங்கிரஸ் பிரமுகர்கள் அடாவடியாக பணம் வசூல்

Bharat Jodo Yatra: ராகுல் காந்தி யாத்திரைக்கு நிதியுதவி வேண்டும் என கேரளா காங்கிரஸ் பிரமுகர்கள் கடைக்காரர்களிடம் அடவடியாக பணம் வசூல் செய்த காணொளி வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kollam, India
    காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக ராகுல் காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 4 நாள்கள் 59 கிமீ தூரம் யாத்திரை மேற்கொண்ட நிலையில், தற்போது அவர் கேரளாவில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த யாத்திரைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் கொல்லம் பகுதியில் மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் அங்குள்ள கடைகளில் ராகுலின் யாத்திரைக்கு நிதி உதவி வேண்டும் என கடைக்காரர்களிடம் ரூ.2,000 தொகையை அடாவடியாக வசூல் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள காய்கறி கடைக்காரரான பவாஸ் என்பவரிடம் ரூ.2,000 பணம் கேட்ட நிலையில், தன்னால் ரூ.500 தான் தர முடியும் என்றுள்ளார். இதை ஏற்காமல் கடைக்காரர் பவாஸை திட்டி சாடியுள்ளனர். மேலும், கேட்ட பணத்தை தராமல் யாரும் உயிருடன் போக முடியாது என்ற தொனியில் மிரட்டியுள்ளனர்.


    இந்த அடாவடி செயலின் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடை உரிமையாளர் எஸ் பவாஸ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று காங்கிரஸ் பிரமுகர்களைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..!

    இது போன்ற செயலுக்கு கட்சி ஒரு போதும் மன்னிப்பு தராது. கட்சியின் கொள்கை இதுவல்ல என்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காவல்துறை இரு வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress party, Kerala, Rahul gandhi, Viral Video

    அடுத்த செய்தி