ஹோம் /நியூஸ் /இந்தியா /

கல்லூரி மாணவி மர்ம மரணம்.. காதலன் மீது மாணவியின் பெற்றோர் பரபரப்பு புகார்!

கல்லூரி மாணவி மர்ம மரணம்.. காதலன் மீது மாணவியின் பெற்றோர் பரபரப்பு புகார்!

உயிரிழந்த மாணவி

உயிரிழந்த மாணவி

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கன்னியாகுமரி மாவட்டத்தில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (56). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தங்கபாய் (51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.

இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார்.

இவர் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை காதிலித்து வந்துள்ளதாகவும், காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 1ம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியதை தொடர்ந்து அவரது பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க | ஜூஸில் விஷம் கலந்தது எப்படி? போலீஸாரிடம் நடித்துக்காட்டிய கேரள பெண்.. வீடியோ பதிவு செய்த போலீஸ்!

3 நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 4 ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய், நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால், மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Kerala, Student Suicide