பெரியார் புகழ் ஓங்குக! தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்

news18
Updated: September 17, 2019, 4:12 PM IST
பெரியார் புகழ் ஓங்குக! தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
news18
Updated: September 17, 2019, 4:12 PM IST
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தநிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியாரின் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.


அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்!  பெரியார் புகழ் ஓங்குக!’ என்று பதிவிட்டுள்ளார். பினராயி விஜயன் அரசியல் பிரச்னைகளுக்கு பெரியாரை அவ்வப்போது உதாரணம் கூறுவது குறிப்பிடத்தக்கது.Also see:

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...