உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அம்மாநில பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ள ட்விட்டர் பதில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என 4 முனை போட்டி நடைபெறுவதால், பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,
'கேரளாவைப் போல உத்தரப்பிரதேசம் மாறி விடுமோ என்று யோகி ஆதியத்நாத் அச்சமடைகிறார். அப்படி மாற்றம் அடைந்தால், சிறந்த கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு கிடைக்கும். சமூக நல்லிணக்கம் ஏற்படும். மதம் மற்றும் சாதியின் பெயரால் பொதுமக்கள் கொல்லப்பட மாட்டார்கள். இதைத்தான் அம்மாநில மக்களும் விரும்புவார்கள்.' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க -
சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு... 60 வயது முதியவர் கைது
இந்த பதிவு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக உத்தப்பிரதேச பாஜக வாக்குறுதிகள் குறித்து யோகி ஆதித்யநாத் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், உத்தரப்பிரதேச வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உத்தரப்பிரதேசம் கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறிவிடும் என்று கூறியிருந்தார். இதற்கு பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்.
யோகியின் பிரசார பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பதில் அளித்துள்ளார். அதில், 'பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வராவிட்டால், உத்தரப்பிரதேசம் காஷ்மீராகவோ, மேற்கு வங்கமாகவோ அல்லது கேரளாவாகவோ மாறும். உத்தரப்பிரதேசத்திற்கு அதிர்ஷ்டம் ஏற்படும். காஷ்மீர் அழகானது. மேற்கு வங்கம் கலாசாரம் கொண்டது. கேரளா கல்வியில் சிறந்தது.' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க -
வெளிநாட்டு பயணிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளில் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு
5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம்தேதி வெளியிடப்படுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.