ஹோம் /நியூஸ் /இந்தியா /

தங்க கடத்தலில் தொடர்பா? ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுக்கு பினராயி விஜயன் விளக்கம்

தங்க கடத்தலில் தொடர்பா? ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுக்கு பினராயி விஜயன் விளக்கம்

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

Kerala Gold Smuggling Case: கேரளாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்காக இடதுசாரிகள் பாடுபடுகின்றனர். இடது முன்னணி அரசாங்கத்தை இழிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அடிப்படையற்ற பிரசாரங்களை மக்கள் உணர்ந்து கொண்டு நிராகரிப்பார்கள் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் ஆதாயம் தேடும் சதித் திட்டத்தின் ஒருபகுதி இதுவெனவும் அவர் விமர்சித்துள்ளார்.

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தங்க கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் பரவியது. அதில், 2016ம் ஆண்டு பினராயி விஜயன் துபாய் சென்றபோது அதிக அளவில் பணம் எடுத்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார். அதில்,'மீண்டும் பொய்களைப் பரப்பி அரசின் ஆரோக்கியமான செயல்பாடுகளை அழித்துவிடலாம் என நினைத்தால் அது வீண் முயற்சி.  தங்கம் கடத்தல் முறைகேடு தொடர்பாக ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள விசாரணை நடத்துமாறு மத்திய அரசிடம் முதலில் கோரிக்கை வைத்தது மாநில அரசு. விசாரணை முறைகள் குறித்த நியாயமான கவலைகளை பின்னர் சுட்டிக்காட்டினோம்.

இதையும் படிங்க: கேரளா தங்கம் கடத்தலில் பினராயி விஜயன், குடும்பத்தினருக்கு தொடர்பு... ஸ்வப்னோ சுரேஷ் அதிர்ச்சி தகவல்

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பொருளாதாரக் குற்றங்களின் மூல காரணத்தை தேடுவதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. சில தரப்பினர், குறுகிய அரசியல் காரணங்களுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கின்றன. இது ஏதோ அரசியல் ஆதாயம் தேடும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்டன. ஒரு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இந்த வழக்கில் குற்றவாளியை வைத்து பழைய விஷயங்களை  மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கின்றனர். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை.  பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொது வாழ்வில் நீண்ட காலமாக மக்களுடன் இணைந்து  முன்னேறி வருபவர்களுக்கு எதிராக .மலிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதை எடுத்துக்கொள்வது ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: இந்திய தினசரி கொரோனா பாதிப்பு 40% அதிகரிப்பு.. 93 நாட்களுக்கு பின் 5000ஐ தாண்டியது.

பழைய குற்றச்சாட்டுகளால் ஆதாயம் அடையலாம் என்று நினைப்பவர்களுக்கு நமது சமூகம் பதில் சொல்லும் என்று நம்பிக்கை உள்ளது. கேரளாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்காக இடதுசாரிகள் பாடுபடுகின்றனர். இடது முன்னணி அரசாங்கத்தை இழிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அடிப்படையற்ற பிரசாரங்களை மக்கள் உணர்ந்து கொண்டு நிராகரிப்பார்கள்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by:Murugesh M
First published:

Tags: Chief Minister Pinarayi Vijayan, Kerala