முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்- தமிழக முதல்வரிடம் பினராயி விஜயன் கோரிக்கை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்- தமிழக முதல்வரிடம் பினராயி விஜயன் கோரிக்கை
முல்லைப்பெரியாறு அணை
  • News18
  • Last Updated: August 16, 2018, 4:21 PM IST
  • Share this:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை அதிகமாக உள்ளதால் வழக்கத்தை விட முல்லைப்பெரியாறு அணியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது.  நீர் வரத்து அதிகமாக இருந்ததல் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

இதையடுத்து அணையீன் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்குச் செல்கிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.


கேரளாவில் மிக அதிக அளவு மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

 
First published: August 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading