கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆனது - குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிதியுதவி

கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆனது - குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிதியுதவி
கேரள முதலவர் பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: August 15, 2019, 10:58 AM IST
  • Share this:
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் 6-வது நாளாக மழை நீடித்தது. குறிப்பாக மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 59 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லட்சம் ரூபாய் நிதியுதவி


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், வீடுகள் சேதமடைந்திருந்தால் தலா 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 10,000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் வேதனை இதனிடையே, கேரளாவுக்கு உதவி தேவையில்லை என சிலர் பொய் பிரசாரம் செய்வதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் கேரள மக்களுக்கு முடிந்த அளவு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.துணி வணிகருக்கு சூப்பர் ஸ்டாரான மம்மும்டி வாழ்த்து

நவ்சத் என்ற துணி வணிகர், தான் வியாபாரத்திற்காக வைத்திருந்த அனைத்து துணிகளையும் மொத்தமாக நிவாரண உதவியாக கொடுத்துள்ளார். நவ்சத்தின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மும்டி, நவ்சத்தை தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம்

இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள விவசாயிகள், தங்கள் கடன்களை திருப்பிச்செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாசுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போலாங்கிர், கலஹன்டி, கந்தமால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த மாவட்டங்களின் மக்கள் கடுமையாக சிரமம் அடைந்துள்ளனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில், 30க்கும் அதிகமான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு, ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கை காரணமாக மாணவர்கள் பத்திரமாக மீண்டனர்.

கர்நாடகா

கர்நாடகா மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. மங்களூருவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது, மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு சென்ற மீட்புப்படையினர் மாணவர்களை மீட்டனர். கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் மழை நாளையும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading