ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொடியேறி பாலகிருஷ்ணன் உடலை தோளில் சுமந்து சென்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

கொடியேறி பாலகிருஷ்ணன் உடலை தோளில் சுமந்து சென்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

கொடியேறி பாலக்கிருஷ்ணன் உடலை சுமந்து செல்லும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கொடியேறி பாலக்கிருஷ்ணன் உடலை சுமந்து செல்லும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

அக்டோபர் 2ஆம் தேதியன்று அவரது உடல் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kannur, India

  கேரள சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அவரது உடலை தோளில் சுமந்து சென்றனர்.

  கேரள சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும் மூத்த கம்யூனிச தலைவருமான கொடியேறி பாலகிருஷ்ணன் ( வயது 69) அக்டோபர் 1ஆம் தேதி காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்நிலையில் அக்டோபர் 2ஆம் தேதியன்று அவரது உடல் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் தலைச்சேரியில் இருந்து கன்னூருக்கு கொண்டு செல்லப்பட்டது. கன்னூருக்கு கொண்டு செல்லும் வழியிலும் கன்னூர் மாவட்ட அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  இதையும் வாசிக்க: உபி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

  அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் கொடியேறி பாலகிருஷ்ணின் உடலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் சிபிஎம் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரியும் சுமந்து சென்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CPM, Funeral procession, Kerala, Kerala CM Pinarayi Vijayan