பாஜக தூண்டுதலால் விசாரணை முகமைகள் அரசுகளை அச்சுறுத்தினால், அவர்களும் நீதி விசாரணையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்: பினராயி விஜயன்

பினராயி விஜயன்

1980-க்குப் பிறகு கேரளாவில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாக சரித்திரம் இல்லை. இந்த முறை அதை மாற்றி நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார் பினராயி விஜயன். 

 • Share this:
  தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு என்.ஐ.ஏ., சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரனை அமைப்புகளை எதிரிகள் மீது ஏவி விடுகிறது, ஆனால் இது ஜனநாயக நாடு, நிச்சயம் இந்த விசாரணை அமைப்புகளும் நீதி விசாரணை என்பதை எதிர்கொண்டாக வேண்டும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

  எங்கள் ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. வழக்கமான ஊழல் குற்றச்சாட்டுகள்தான் எழுப்பப்படுகின்றன. இதை நாம் பார்த்தோமானால் எங்கள் அரசு மீது சீரியஸான குற்றச்சாட்டுகள் எதையும் எழுப்ப முடியாது. ஏனெனில் கேரளாவில் ஊழல் இல்லை. ஊழல் இல்லாத அரசு எங்களுடையது.

  தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு பேச எதுவும் இல்லை எனவே சில விஷயங்களை இட்டுக் கட்டி குற்றம்சாட்டுகிறார்கள். மக்கள் அவர்களை நம்புவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் அது ஒரு திறந்த புத்தகம்.

  பாஜக மத்திய விசாரணை முகமைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. மத்திய விசாரணை முகமைகளும் சட்டப்படிதான் நடக்க வேண்டும். சட்டத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டால் இந்த நாட்டில் இன்னும் முறையான நீதி விசாரணை அமைப்பு உள்ளது, இப்போது இந்த விசாரணை முகமைகள் நீதி விசாரணையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

  வெறுமனே அச்சுறுத்தல் மூலம் மட்டுமே அவர்கள் காரியம் சாதிக்க நினைத்தால் நடக்காது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டுகள் இருப்பதான முற்கோளில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களேயானால் அது சட்டத்தின் முன் செல்லுபடியாகாது.

  எனவே இந்த ஊழல் குற்றச்சாட்டுகள், விசாரணைகள் பற்றியெல்லாம் கவலையில்லை. மக்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள், என்றார் பினராயி விஜயன்.

  கேரள மாநில சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தர்மடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பினராயி விஜயன், வேட்புமனு தாக்கல் செய்தார்.

  1980-க்குப் பிறகு கேரளாவில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாக சரித்திரம் இல்லை. இந்த முறை அதை மாற்றி நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார் பினராயி விஜயன்.
  Published by:Muthukumar
  First published: