9,500 பேர் இந்துத்துவ அமைப்பினர்தான்!! பினராயி விஜயன் அளித்த அறிக்கையில் தகவல்

ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல முயன்றதற்கு, அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, இந்துத்துவ அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

news18
Updated: January 11, 2019, 11:53 AM IST
9,500 பேர் இந்துத்துவ அமைப்பினர்தான்!! பினராயி விஜயன் அளித்த அறிக்கையில் தகவல்
கேரள முதலவர் பினராயி விஜயன்
news18
Updated: January 11, 2019, 11:53 AM IST
சபரிமலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில ஆளுநர் சதாசிவத்திடம் அளித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி, ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல முயன்றதற்கு, அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, இந்துத்துவ அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்ததையடுத்து, சபரிமலையில் வன்முறை ஏற்பட்டது. அந்த வன்முறை குறித்து வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் அறிக்கை கேட்டிருந்தார்.
Loading...


இந்நநிலையில், சபரிமலை வன்முறை குறித்து பினராயி விஜயன் அரசு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையில், "சபரிமலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை 2012 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

அதில், 10,561 மீது குற்றம்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 9,489 பேர் சங்பரிவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், திட்டமிட்டு எப்படி தாக்குதல் நடைபெற்றது என்றும் பெண் பக்தர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் மீது எப்படி தாக்குதல் நடைபெற்றது என்று விளக்கப்பட்டுள்ளது.

"முதன்முறையாக கோயில் நடை திறக்கப்பட்டபோது, கோயிலுக்கு வந்த 30 பேரை போராட்டக்காரர்கள் தடுத்துநிறுத்தினர். அதில், 5 பேர் செய்தியாளர்கள். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதான வன்முறை. அதில், 17 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 25 பேர் கைது செய்யப்பட்டனர்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...