தந்தை அனுமதியோடு சிறுமியை 2 ஆண்டுகளாக சீரழித்த 30 கொடூரர்கள்... பதறவைக்கும் பின்னணி

தந்தை அனுமதியோடு சிறுமியை 2 ஆண்டுகளாக சீரழித்த 30 கொடூரர்கள்... பதறவைக்கும் பின்னணி
சித்தரிக்கப்பட்ட படம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2019, 8:21 PM IST
  • Share this:
கேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர், 30 பேரால் 2 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அவரது தந்தையே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுப்பது மட்டுமல்லாமல் எப்போதும் மனசோர்வுடனேயே காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த ஆசிரியை ஒருவர், அச்சிறுமியை ஆலோசனைக்காக மனநல ஆலோசகரிடம் அழைத்துச்சென்றுள்ளார்.

அவரிடம் சிறுமி அளித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு 2 வருடங்களாக 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கூறியுள்ளார். தந்தையின் நண்பர்களும் வருவார்கள் என்றும் இந்த கொடுமைக்கு தனது தந்தையும் உடந்தை எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


பள்ளி விடுமுறை நாட்களின் போது அதிகம் பேர் வருவார்கள் என்றும் இது எதுவும் தனது தாய்க்கு தெரியாது என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அம்மாவிடம் சொன்னால் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக தனது தந்தை மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளளார். இதனைக் கேட்ட ஆசிரியை மற்றும் ஆலோசகர் அதிர்ச்சியில் மூழ்கினர். இதுகுறித்து மலப்புரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை மற்றும் மேலசெல்லரி பகுதியை சேர்ந்த 36 வயதான அ‌ஷரப், செங்காலங்காடி பகுதியை சேர்ந்த 38 வயதான சைஜு ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மலப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

Watch: 
First published: September 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading