மாநில சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை...! ஆளுநருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி

மாநில சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை...! ஆளுநருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி
பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: January 17, 2020, 3:16 PM IST
  • Share this:
மாநில சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை என கேரள ஆளுநரை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் பயனற்றது என, அம்மாநில ஆளுநர் விமர்சித்து இருந்தார்.

சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் விமர்சித்த ஆளுநர், தான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி இருந்தார்.


Also read... பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

இந்நிலையில் மலப்புரத்தில் நடைபெற்ற அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்பு மன்னர்களை விட அதிகாரம் மிக்கவர்களாக பிரிட்டிஷார் இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், இப்போது அப்படி யாரும் கிடையாது என்றார்.மேலும், மாநில சட்டப்பேரவையை விட உயர்ந்தவர்கள் இல்லை என்ற பினராயி, அரசியல் சாசனத்தை ஆளுநர் படிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஆளுநருக்கு தேவையான விளக்கம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Also see... 
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading