இந்திய அளவில் இன்று ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் இன்று மூன்றாம் கட்டவாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தீவிரப் போட்டி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க எப்படியாவது கால்பதித்துவிட தீவிரமாக முயற்சித்துவருகிறது. இன்று காலை 7 மணியிலிருந்து கேரளாவில் வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது.
கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று காலையில் பினராயி பகுதியிலுள்ள ஆர்.சி அமலா பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு செய்தார்.
வாக்கு பதிவு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசியஅவர், ‘கேரள மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். கேரள மக்கள் எங்கள் மீது முழு நம்பிக்கைவைத்துள்ளனர். அரசுக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மக்களை நிராகரிப்பார். நாங்கள் 2016-ம் வெற்றி பெற்றதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Election 2021, Kerala CM Pinarayi Vijayan, Marxist Communist Party