பாதிரியாருக்கு எதிரான வீடியோவை பகிர்ந்த விவசாயிக்கு நேர்ந்த அவலம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

பாதிரியாருக்கு எதிரான வீடியோவை பகிர்ந்த விவசாயிக்கு நேர்ந்த அவலம் -  கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

விவசாயிக்கு நேர்ந்த அவலம்

இந்த வீடியோவை பகிர்ந்ததால் அதிருப்தி அடைந்த பாதிரியாரின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜில்சன் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அவரை சாலையில் இழுத்துச் சென்றனர்

  • Share this:
பாதிரியாருக்கு எதிரான சர்ச்சைக்குரிய வீடியோவை பகிர்ந்த விவசாயி ஒருவரை வீட்டில் இருந்து தரதரவென இழுத்து வந்து கட்டாயப்படுத்தி பாதிரியாரின் காலில் விழ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கன்னூர் மாவட்டத்தில் உள்ள குன்னோத் பகுதியைச் சேர்ந்த ஜில்சன் உன்னிமக்கல், விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள தூய தாமஸ் தேவாலயத்தின் உறுப்பினர் ஆவார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி அன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். சக தேவாலய உறுப்பினரும் விவசாயியுமான மேத்யூ செருபரம்பில் என்பவர் பேசியுள்ள அந்த வீடியோவில் தான் அங்கம் வகிக்கும் தேவாலயத்தின் பாதிரியார் அகஸ்டின் பாண்டியமாக்கல் குறித்து சில குற்றச்சாட்டுகளை மேத்யூ தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்ததால் அதிருப்தி அடைந்த பாதிரியாரின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜில்சன் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அவரை சாலையில் இழுத்துச் சென்றனர். அவர்கள் கும்பலாக சேர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சுமார் 3 மணி நேரம் சிறை வைத்ததுடன் தனது செயலுக்காக அறங்காவலர் குழு உறுப்பினரின் காலில் ஜில்சனை கட்டாயப்படுத்தி விழ வைத்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த தூய தாமஸ் கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள் விவசாயியை காலில் விழ வைத்த சம்பவத்தை கண்டித்து இன்று பாதிரியார் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்துக்கு காரணம் என்ன?

ஜில்சன் பகிர்ந்த அந்த வீடியோவில் பேசிய மேத்யூ செருபரம்பில் பாதிரியார் மீது சில குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேத்யூவின் (வயது 57) 16 வயது மகனுக்கு புற்றுநோய் இருந்துள்ளது. 4 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் மரண படுக்கையில் இருந்த போது தனக்காக பாதிரியார் பிரார்த்தனை நடத்த வேண்டும் என தனது கடைசி ஆசையை அவரின் தந்தையிடம் கூறியுள்ளார். இதை பாதிரியாரிடம் கூறி தனது வீட்டிற்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என கோரிய போது அவர் வீட்டிற்கு வர முடியாது, தேவாலயத்திற்கு அழைத்து வர வேண்டும் என கூறியதாக பேசினார். மேலும் தனது மகன் மரணப் படுக்கையில் இருக்கிறார் எனவும் ஒரு கால் நீக்கப்பட்டுள்ளது, அவரால் வருவது இயலாத காரியம் என எடுத்துக்கூறியும் அவர் வராமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்ததாக கூறியுள்ளார்.

33 நாட்கள் கழித்து தான் தன் வீட்டிற்கு வந்து பிரார்தனை செய்தார் ஆனால் அதற்குள் என் மகன் சுயநினைவை இழந்துவிட்டான். அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலே அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டான். மேலும் அவனுக்கு இறுதி சடங்கு செய்வதற்கும் அவர் மறுத்துவிட்டார், பாதிரியாரின் நடவடிக்கை குறித்து பேராயர் ஜார்ஜ் நஜரலகட் என்பவரிடம் புகார் அளித்திருப்பதாகவும் அந்த வீடியோவில் மேத்யூ பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்ததற்காகத் தான் ஜில்சனை பாதிரியாரின் ஆதரவாளர்கள் அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: