முகப்பு /செய்தி /இந்தியா / ஓடிக்கொண்டிருந்த காரில் பற்றி எரிந்த தீ! கருகிய கார்.. தப்பித்த பயணிகள்!

ஓடிக்கொண்டிருந்த காரில் பற்றி எரிந்த தீ! கருகிய கார்.. தப்பித்த பயணிகள்!

தீ விபத்தில் சிக்கிய கார்

தீ விபத்தில் சிக்கிய கார்

Kerala car fire accident | காரில் எழுந்த வந்த தீயை கண்ட பயணிகள் காரில் இருந்து இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலத்தில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கேரள  மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது தலப்புழ எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென பற்றி எரிந்தது. இதனைக்கண்ட கார் ஓட்டுநர் பதட்டத்துடன் காரை நிறுத்தி பயணிகளுடன் வெளியேறிவிட்டார்.

நொடிக்கூட தாமதிக்காமல் அந்த தீயானது மளமளவென கார் முழுவதும் பரவியது. இதனை கண்டு அச்சமடைந்த கார் ஓட்டுநர் அங்கு இருந்த டேங்கர் லாரியில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் போராடியும்  தீயை அணைக்க முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் கார் முழுவதையும் சாப்பிட்ட தீ அதுவாகவே வேகத்தை குறைத்து கொண்டு அணைந்தது.இதில் கார் முழுவதும் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் சுதாரித்து கொண்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணியின் கார் தீ பற்றி எரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே குழந்தையுடன் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Fire accident, Kerala