Home /News /national /

கேரளாவில் கூகுள் மேப்பை நம்பி சேத்துக்குள் சிக்கிய கார்

கேரளாவில் கூகுள் மேப்பை நம்பி சேத்துக்குள் சிக்கிய கார்

கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய கார்

கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய கார்

Google Map: . இரவு நேரம் என்பதால் பாதை சரியாக தெரியாமல் பாதை முடியும் இடத்தில் உள்ள வயல்வெளி சேற்றில்  கார் சிக்கிகொண்டது.

கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் ஓட்டுநர்  ஓட்டி வந்த கார் சேற்றில் சிக்கியது. பின்னர் கயிறு கட்டி காரை பொதுமக்கள் மீட்டனர்.

கேரள மாநிலம் , திரூர் பகுதியை சார்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் புதுக்குளம் பகுதி நோக்கி நேற்று இரவு கூகுள் மேப் உதவியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலசித்ரா மலைபாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது.

இதை தொடர்ந்து , அவர் காரை மலைப்பாதை வழியாக இயக்கியுள்ளார். இரவு நேரம் என்பதால் பாதை சரியாக தெரியாமல் பாதை முடியும் இடத்தில் உள்ள வயல்வெளி சேற்றில்  கார் சிக்கிகொண்டது. சேற்றில் இருந்து காரை வெளியே எடுக்க அவர் பலமுறை முயற்சித்தும் காரை சேற்றில் இருந்து மீட்க முடியவில்லை.

இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய அந்நபர், அப்பகுதி வாசிகளிடம் நடந்தவற்றை கூறி உதவி கோரியுள்ளார். இதனிடையே,  வாகனம் ஓட்டி வந்த ஒருவரை தவிர மற்றவர்கள் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அங்கிருந்து புதுக்குளம் பகுதிக்கு சென்றனர்.

இதையும் படிக்க: கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது முஸ்லிம்கள்தான் - யோகிக்கு ஒவைசி பதிலடி

பின்னர்  சேற்றில் சிக்கிக்கொண்ட காரை மீட்கும் பணி இன்று காலை நடைபெற்றது.  கயறு கட்டி அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. . கூகுள் மேப்பை நம்பி சிக்கிக் கொண்ட காரை மீட்கும் இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Published by:Murugesh M
First published:

Tags: Car, Google map, Kerala

அடுத்த செய்தி