ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து... 6 வயது குழந்தை உட்பட மூவர் பலி..!

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து... 6 வயது குழந்தை உட்பட மூவர் பலி..!

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து

Kerala Accident : திருச்சூரில் கட்டுப்பாட்டை இழந்த  கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து, ஆறு வயதுடைய குழந்தை உட்பட மூன்று பேர் பலி. மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆறாட்டுபுழா என்னும் பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், எதிரே வந்த மற்றொரு காருக்கு சைடு கொடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த இந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவர்களை இடித்து தள்ளிவிட்டு ஆற்றுக்குள் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் இறங்கி உள்ளனர். மேலும், கவிழ்ந்த காரை கயிறு கட்டி ஆற்றின் ஓரமாக கொண்டு வந்து காருக்குள் சிக்கி இருந்த ஆறு பேரையும் மீட்டனர்.

அந்த ஆறு பேரில் 6 வயதுடைய ஒரு குழந்தை உட்பட மூவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருச்சூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

First published:

Tags: Accident, Kerala