மாஸ்க் அணியாத நபரை தாக்கிய கேரள ஓட்டுநர் - இணையத்தில் வெளியான வீடியோ

தொழிலாளியை தாக்கும் கேரள ஓட்டுநர்

தொழிலாளரை அடித்ததற்காக ஓட்டுநர் ஆண்டோவை கேரள போக்குவரத்துத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

 • Share this:
  கேரள மாநிலம் அங்கமாலி பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்து செல்லுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி இரவு 7.30 மணியளவில் புலம்பெயர் தொழிலாளி அங்கமாலி பேருந்து நிலையத்தில் படுத்திருந்தார். அவரை கேரள போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் ஆண்டோ என்பவர் அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

  வேஷ்டி சண்டை அணிந்த வயதான நபர் ஒருவர் பேருந்து நிலைய நடைமேடையில் உறங்கிக்கொண்டிருக்கிறார். நீல நிற உடை அணிந்து வந்து கேரள போக்குவரத்து துறை ஓட்டுநர் ஒருவர் அவரை எழுப்புகிறார். கையில் வைத்திருந்த தடியை கொண்டு அந்த நபரை ஓட்டுநர் தாக்குகிறார். இதில் அந்த வயதான நபருக்கு கையில் ரத்தம் வழியத் தொடங்கியது. கைகளில் ரத்தம் வழிந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் படுத்துவிட்டார். பேருந்து நிலையத்தில் இருந்து சிலர் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.  நன்றி : மீடியா ஒன் டிவி

  இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதையடுத்து கேரள போக்குவரத்துக்கு துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பேருந்து நிலையத்துக்கு மாஸ்க் அணியாமல் வந்த நபர் குறித்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களிடம் தெரிவிக்கவில்லை. தொழிலாளரை அடித்ததற்காக ஓட்டுநர் ஆண்டோவை கேரள போக்குவரத்துத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
  Published by:Ramprasath H
  First published: