• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரள மணப்பெண்..உக்ரைன் மாப்பிள்ளை - ஆன்லைனில் நடந்து முடிந்த திருமணம்

கேரள மணப்பெண்..உக்ரைன் மாப்பிள்ளை - ஆன்லைனில் நடந்து முடிந்த திருமணம்

கேரளாவில் ஆன்லைனில் நடந்த திருமணம்

கேரளாவில் ஆன்லைனில் நடந்த திருமணம்

கேரளாவில் அன்லைனில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

  • Share this:
    கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு உக்ரைன் நாட்டில் வேலைப்பார்க்கும் நபருக்கு ஆன்லைன் மூலம் திருமணம் நடந்ததுள்ளது. இந்த திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோருக்கு இவருக்கு வரன் தேடியுள்ளனர். இந்நிலையில் திருவணந்தபுரத்தை சேர்ந்த தன்யாவை பெண் பார்த்துள்ளனர். ஜீவன் குமார் , தன்யாவுக்கு திருமணம் செய்து வைப்பது என இருவீட்டாரும் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய புனலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

    கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனா தொற்றின் காரணமாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இதன்காரணமாக திருமண நாளில் ஜீவன் குமாரால் கேரளா வர இயலவில்லை.

    இதனையடுத்து ஜீவன் குமார், தன்யா இருவரும் ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்க கோரி கேரள ஐகோர்ட் படி ஏறினர். இவர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.  இந்த வழக்கில் வெளியுறவுத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த  இரண்டு துறைகளும் ஆன் லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதி வழக்கியது.

    இதனையடுத்து இவர்களின் திருமணம் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உக்ரைனில் இருந்தபடி மாப்பிள்ளை ஜீவன் குமார் தனது திருமண நிகழ்வில் பங்கேற்றார். மணமகள் தன்யா, மற்றும் மணமகன் ஜீவன் குமாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர். சார்பதிவாளர் முன்னிலையில் ஆன்லைன் மூலம் திருமணம் நடந்தது. இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர். திருமணத்தை பதிவு செய்ய மணப்பெண் தன்யா பதிவேட்டில் கையொப்பம் இட்டார். மணமகன் ஜீவன் குமார் சார்பில் அவரது தந்தை கையெழுத்திடார். திருமணம் நடந்த சில மணிநேரங்களில் அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. கேரளாவில் அன்லைனில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: