ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலககோப்பை கால்பந்து : அர்ஜென்டீனா வெற்றியை கொண்டாடியபோது சிறுவன் திடீர் உயிரிழப்பு..!

உலககோப்பை கால்பந்து : அர்ஜென்டீனா வெற்றியை கொண்டாடியபோது சிறுவன் திடீர் உயிரிழப்பு..!

உயிரிழந்த சிறுவன்

உயிரிழந்த சிறுவன்

Kerala News : உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டீனா அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டீனா அணி இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இரவு போட்டி முடிந்ததும் அர்ஜென்டீனா அணியின் வெற்றியை கேரளா மாநிலம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், கேரளா மாநிலம் கொல்லம் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தின் முன்பு அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகத்தின் உச்சியில் மகிழ்ச்சியோடு கொண்டாடி கொண்டிருந்தபோது கொல்லம், கோட்டைக்ககம் பகுதியை சேர்ந்த அக்ஷய் என்ற 17 வயது மாணவன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை கண்டு ரசித்த இந்திய கிரிக்கெட் அணி… ஃபோட்டோஸ் வைரல்…

உடனடியாக அவரை நண்பர்கள் அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் அதற்கு முன்னதாக அக்ஷய் பரிதாபமாக உயிரிழந்தார். உலக கோப்பை வெற்றியை கொண்டாடி மகிழும்போது  17 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: FIFA World Cup 2022, Kerala